Gedicht

ich nenne mich du weil der Abstand
so vergeht zwischen uns wie Haut
an Haut wir sind nicht
zu unterscheiden zu trennen eins
und das Andere die Grenze ist
die Verletzung der Übergang
eine offene Wunde du nennst mich
ich wer von uns beiden sagt
hier hast du ein Messer
mach meinen Schnitt.

© Suhrkamp Verlag Frankfurt am Main 1991
从: Deutsches Roulette. Gedichte 1984-1989
Frankfurt am Main: Suhrkamp Verlag, 1991
ISBN: 3-518-11642-8
录制: 2000 M. Mechner, literaturWERKstatt berlin

கவிதை

நானே என்னை  நீயென அழைக்கிறேன் 
ஏனெனில் 
எம்மிருவரிடையிலும் உள்ள 
தூரம் மறைகிறது 
தோலோடு தோல் போல் 
எம்மிருவரையும் பிரிக்கும் எல்லை 
ஒரு காயம் போலவும் 
எல்லையிலுள்ள மறிப்பு 
ஒரு திறந்த புண்போலவும் 
இப்பொழுது நீ 
என்னை நான் என அழைக்கிறாய் 
இதோ கத்தி 
வெட்டுவது யார்
நீயா நானா?

Translated into Tamil by Somasundrampillai ‘Sopa’ Pathmanathan

A result of the project Poets Translating Poets. Versschmuggel mit Südasien, organised in 2015 by the Goethe Institute in collaboration with Literaturwerkstatt Berlin