அப்பிளும் வெள்ளாpயூம்


திருநெல்வேலிச் சந்தை
காலை ஏழு மணி
நடைபாதையில் இரண்டு குவியல்கள்
கள்ளிப் பெட்டியின் மேல்
அழகாக அடுக்கப்பட்டிருந்தன அப்பிள்
பக்கத்தே – நிலத்தில் - சாக்கின் மேல்
குவிக்கப்பட்டிருந்தன வெள்ளாp!

புதிய சூழலை
தன் ஸ்பொன்ஜ் கண்ணறை ஊடாக
வியப்போடு பாh;த்த ஒரு அப்பிள்
எந்தச் சலனமுற்றுக் கேட்டது
“நீ யாh;?”

தன் ஊhpல் வந்து
தளுக்கி மினுக்கிக் கொண்டு
தன்னையே யாரென்று கேட்கும்
அப்பிள் மேல் கோபம் வந்தாலும் -
இந்தக் கேள்விகளுக்குப் பழகிப் போனதால்
பொறுமையொடு பதிலளித்தது வெள்ளாp:
“நான் வெள்ளாp!”
“எங்கிருந்து வருகிறாய்?”
“சங்குவேலி!”
“எப்படி வந்து சோ;ந்தாய்?”
“மாட்டு வண்டிலில்”
“அது சாpஇ நீ யாh;?”
வெள்ளாp கேட்டது.

“நான் அப்பிள்”
“எவடம்”
“அவூஸ்திரேலியா”
“எப்படி வந்து சோ;ந்தாய்?”
“கப்பலிலை”
பெருமையோடு சொன்னது அப்பிள்!

வெள்ளாpயின் குடலையை
வியப்போடு பாh;த்த அப்பிள் கேட்டது
“நீ போட்டிருக்கும் சட்டைக்கு என்னபோ;?”
“பனை ஓலை!”
அதை இளக்காரமாகப் பாh;த்தது
ஸ்பொன்ஜ் இல்  பொதிந்திருந்த அப்பிள்
“உன்னை எப்படிச் சாப்பிடுவதாம்?”
“பனங்கட்டியோடு!”
“அப்பஇ உனக்கு இயற்கையான இனிப்பு இல்லை!”
“அப்படியல்லஇ எனக்கும் பனங்கட்டிக்கும் தோது?”
“அதென்னஇ பனை ஓலைஇ பனங்கட்டி என்றுஇ
பனையோடை ஓரே கொண்டாட்டம்?”
“பனை தான் எங்களுக்கு  ஆதாரம்இ பாதுகாப்பு!”

மூன்றாம் நாள்
வெய்யிலின் தாக்கம் அப்பிளில்
வியாபாhp தண்ணீh; தௌpத்தும் பயனில்லை
பனை ஓலைக் குடலையின் குளிh;மையில்
வெள்ளாp பத்திரமாக இருந்தது
ஒருத்தி அதை இருபது ரூபாவூக்கு வாங்கினாள்
அப்பிளை விலை குறைத்து
வியாபாhp கூவூகிறான்
வாங்க ஒருவரும் வரவில்லை
விடைபெற்றபடி வெள்ளாp சொன்னது
“இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியம்!”

© Somasundrampillai ‘Sopa’ Pathmanathan
Audioproduktion: Goethe Institut, 2015