பாலாய் நிலவூ பொழிகிறது

பாலாய் நிலவூ பொழிகிறது – பௌh;ணமி நாள்
ஓராயிரம் நினைவூ நெஞ்சில் அலைமோத….
பாலாய் நிலவூ பொழிகிறது பௌh;ணமி நாள்

முன்னாள் இது போல் முழுநிலவில் முற்றத்துத்
தென்னைமுழுகுகையில் தென்றல் அதைத் தாலாட்டும்
தூரத்தே ஊதும் சுருட்டி மிதந்து வரும்
ஈர மணலில் இருகால் புதைய நெடு
நேரம் கழியூம் நினைப்பேயிலாதுஇ கடல்
ஓரம் கைகோத்தே உலா வருவோம்இ மேலே வான்
நீல விதானம் விhpக்கும்இ விண்மீன்களோ
கோலம் இடும்இ ஓலைக் குடிசையிலே தென்மோடி

ஆட்டுவிக்கும் அண்ணாவி பாடல் உடுக்கோடு
போட்டுலுப்பும் சாமப் பொழுது!

பாலாய் நிலவூ பொழிகிறது பௌh;ணமி நாள்
திங்கள் மூன்றாகச் சிறிதும் மழையில்லை
எங்கள் பயிh; பச்சை எல்லாம் கருகுகையில்இ
வானத்தை நோக்கிக் கழுத்து மிக வலித்துப்
போனதே அன்றிப் புதினம் எதுவூமில்லை

“நீh; வேணும்இ இந்த நிலம் தோண்டவல்ல பல
ஆள் வேணும்” - கூவி அழைக்க இளைஞா; சிலா;
ஆயூதங்கள் ஏந்தி வந்தாh;.  “நீh; கண்டலாதினி நாம்
ஓயூறதே இல்லை” – ஒரு சூள் உரைத்தாh;கள்.


பாலாய் நிலவூ பொழிகிறது – பௌh;ணமிநாள்
நூறாயிரம் அலைகள் மோதி நுரை சிதற
பாலாய் நிலவூ பொழிகிறது பௌh;ணமி நாள்

பச்சைப் பயிரும் பயன் மரமும் தோப்புகளும்
உச்சி கருகி உயிரூசல் ஆடுதல் கண்(டு)
ஏங்கி மனம் நொந்திருந்தோம் எமதின்னல்
தாங்கப் பொறாராய்த் தாமோடி  வந்தாh;கள்
அண்டை அயலாh;! அலவாங்கொடு பாரை
கொண்டு வந்தாh;இ சோற்றுப் பொதியூம் அனுப்பி வைத்தாh;
“ஆகாஇ இவா;கள் போல் ஆh; வருவாh;” என்றுருகி
வீதியெலாம் வாழை நட்டுத் தோரணமும் தொங்கவிட்டு
வாசல் தொறும் பூரண கும்பம் முறையாக வைத்து
மாலை மாpயாதை செய்து வரவேற்றௌம்!
வானத்திருந்தமரா; வந்தது போல் பூhpத்து
மோனத்திருந்தோம் - முழுசாய் இரு மாதம்!
ஊh;திகளில் ஏற்றி ஊh;வலங்கள் செய்வித்தோம்!
பாh; முழுவதும் பாh;க்கப் பவனி பல வந்தோம்!

பாலாய் நிலவூ பொழிகிறது – பௌh;ணமி நாள்

அந்தரத்துத் தேவா; ஒரு நாள் அசுரா;களாய்த்
தொந்தரவூ செய்யத் தொடங்கத் துணுக்குற்றௌம்
நாடொன்று கேட்ட தமிழா; குடியிருக்க
வீடொன்று மில்லாமல் n~ல்லாய் விதைத்தாh;கள்
ஆடு பலி கோழி பலி ஐயோ அணிகலனும்
வீடும் பலியாய்க் கொடுத்து விதிh;விதிh;த்தோம்
நாடு புகுந்தவா;கள் நாளாக நாளாக
வீடு புகுந்தெங்கள் மானம் விலை கேட்டாh;
தண்ணீருக்காகத் தவமிருந்த மக்களைக்
கண்ணீh;க் கடலாட விட்டுக் கதையளந்தாh;!
நீh; காண முன்பு முயன்ற இளைஞா;களை
ஊh; தோறும் தேடி உழக்கி வதைத்தாh;கள்!
பொய்யை மெய்யாகப் புனையூம் முயற்சியிலே
வையம் முழுதும் வலம் வந்து பாh;த்தாh;கள்
அசுரா;களை ஏவி அநியாயம் செய்வித்தாh;
நிசியில் கொலை களவூ நிட்டூரம்இ அம்மம்மா!


“மூன்றாம்பிறை நம் முருங்கை மரத்தடியில்
தோன்றுதுஇ போய்க்கூடித் தொழுகை நடத்துங்கள்”
நாலாம் பிறை கண்டு நாய்படாப் பாடுபட்டோம்
ஓலமிட்டோம் கண்ணீh; உகுத்தோம்இ ஒரு நாளில்
சூறாவளியால் சுழன்று முருங்கை மரம்
பாறஇ நமது பகைவா; மறைந்தாh;கள்!
மீண்டும் இளைஞா; மிடுக்காய்த் தொடங்கினா;
தோண்டஇ ஒரு சிறிதும் சோம்பல் அறியாதாh;!
ஆழத்தே பாறை பிளக்குமொலி அவ்வப்போ(து)
ஈழம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்க –
உண்ட களையில் உறக்கம் கலையூதென
மிண்டிச் சில போ; விசனம் அடைந்தொன்று-
கூடிஒரு திட்டம் கொண்டு வந்தாh;இ நம்மையிவா;
மீறி இது செய்ய விட்டால் வரும் மோசம்!
தாமே பெறுவதுவோ தண்ணீh;? நாமில்லாமல்
ஆமோ ஒரு வாழ்(வூ)? அதனை உணர வைப்போம்
“ஆற்றை மறித்தால் அவா; தம் கிணற்றில் நீh;
ஊற்றும் கிடைக்காது” – உறுதி செய்து கொண்;டாh;கள்.

பச்சைப் பயிரும் பயன் மரமும் தோப்புகளும்
உச்சி கருகி உயிரூசல் ஆடுவதும்
கோயில் குளங்கூடக் குண்டுக் கிலக்காகித்
தீயில் கருகுவதும் கண்டிரங்கா ஜென்மங்கள்
பொழிகின்ற குண்டுகளால் மக்கள் உடல் சிதறி
அழிகின்ற பொல்லா அவலம் இயற்றுபவா;
கொடுமைக்கு முன்னே குனிந்து நடுங்காது
அடிமைத் தளையை அறுத்தெறிய வேண்டாமோ?

தென்னை பனைகள் சிதறுண்டு போனாலும்
என்ன? அதனால் இடிந்து போய் உட்காh;ந்தெம்
ஏலாமை சொல்ல இது நேரம் அல்லஇ இன்று
பாலாய் நிலவூ பொழிகிறது – பௌh;ணமிநாள்

மீண்டும் எமது நிலத்தில் பனை வடலி
தோன்றி நிமிh;க்கஇ துயரம் பொடிபடுக
மீண்டும் அண்ணாவி முழக்கும் உடுக்கின் ஒலி
நீண்ட இரவூப் பொழுதில் நிகழட்டும்!
ஊதும் குழல் பெய் சுருட்டி இனியிரண்டும்
காதும் அமுதம் பொழிக! கடலோரம்
ஈர மணலில் இனிது நாம் நடக்கலாம்
பாலாய் நிலவூ பொழிகிறது – பௌh;ணமிநாள்

(யாழ் மாநாகராட்சி மன்று நடத்திய பௌh;ணமிக் கவியரங்கம்இ 07.06.1990)

© Somasundrampillai ‘Sopa’ Pathmanathan
Audioproduktion: Goethe Institut, 2015

Thoughts on a Full Moon Day

The full moon pours milk

and a hundred thousand thoughts

surge in the sea of my mind


Once before

at a time like this

the gentle breeze lulled the coconut palms

bathed in moonlight

and music wafted on the silent air

the sky spread out like a blue canopy

under which we walked on the wet sand

holding hands as stars drew designs

while from the thatched hut


a song to the throbbing of drums

rended the midnight hours.


The full moon pours milk

but there has been no rain for three months

And as the sun scorches the crops,

and the tops of trees

Craning our necks

we look up in vain


Hands are needed to dig

to seek water

and we appealed

some young men responded and came armed

and vowed ‘We won’t rest

till we strike water.’

neighbors came with crowbars and pickaxes

and others sent them food


Who else could be so lavish, we thought

and decorated our streets with thoranams

We garlanded them and welcomed them

to the sound of drums


Having received those celestial beings

we took them round in motorcades

we were in a trance for over a month


But one day the gods turned into demons

they pestered us who had asked for a homeland

and our homes were destroyed

The transformed gods had to be appeased

with fowls and goats

with ornaments and houses

and wine and women


Not water but tears welled up

the youth were hunted for trying to dig

an unlawful well

and they went everywhere to give credence

to a pack of lies!


The demons were incited

to rob and steal and loot

we had sought to worship the crescent

through the murunga tree

but the crescent we saw

was on the fourth day

We cried, we wailed


Then one day the cyclone uprooted the murunga tree

and the demons vanished

The youngsters undaunted

started all over again the blasting of rocks


Some complained

that their sleep was disturbed;

they conferred: 

“Without asking us?

A venture unheard of!

We cannot permit such nonsense!”


So the river was blocked

and the well ran dry


Parched crops and scorched groves

broken plams and cracked temples

and the ruined homes

the palmyra is blasted?

This is not the time to moan or mourn.

The full moon pours milk


The palmyra will sprout again

and grow erect

as impetuous as ever

never bending its knee

in the face of oppression


Let the throb of the drums

rend the late night air

Let the melody of the flute

pour nectar in our ears


At last we can walk, burying our feet

once again in the wet sand

The full moon pours milk!


Note :- Hindus consider it auspicious to worship the crescent on the third day after the new moon, but to look at it on the fourth day could bring misfortune.

[Composed on the eve of the departure of the IPKF]